சென்னை : சென்னை பெருநகர காவல், M-5 எண்ணூர் காவல் நிலைய சுற்றுக்காவல் வாகன தலைமைக் காவலர்கள் திரு.G.ஶ்ரீதரன் (த.கா.36210) மற்றும் திரு.A.மெர்வின் (த.கா.36041) ஆகியோர் 19.03.2020 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து, YAMAHA இருசக்கர வாகனத்தில் செல்லும் 3 நபர்கள் B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லை மற்றும் N-1 ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் செல்வதாகவும், மேற்படி நபர்களை பிடிக்கும்படியும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தலைமைக் காவலர்கள் ஶ்ரீதரன் மற்றும் மெர்வின் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, 20.03.2020 அதிகாலை சுமார் 01.30 மணிக்கு எண்ணூர், விம்கோ நகர், கலைஞர் தெருவில் YAMAHA இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை பிடிக்க துரத்திச் சென்றபோது, காவலர்கள் வருவதை கண்ட 3 பேரும் மேற்படி இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு இருட்டில் தப்பிச் சென்றனர். பின்னர் தலைமைக் காவலர்கள் இருவரும் மேற்படி YAMAHA R15 (பதிவு எண்.TN22 DZ 1110) இருசக்கர வாகனத்தை கைப்பற்றி M-5 எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேற்படி சம்பவத்தில் இரவு ரோந்தின்போது விழிப்புடன் செயல்பட்ட M-5 எண்ணூர் காவல் நிலைய சுற்றுக் காவல் தலைமைக் காவலர்கள் திரு.G.ஶ்ரீதரன் (த.கா.36210) மற்றும் திரு.A.மெர்வின் (த.கா.36041) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 20.03.2020 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை