மதுரை : மேலூர் காவல் நிலைய எல்கையில் உள்ள து.அம்பலகாரன்பட்டி கிராமத்தில் முருகன்(50) என்பவரை முன்விரோதம் காரணமாக அண்ணாதுரை(51) என்ற நபர் வெட்டி கொலை செய்தார். அப்பொழுது அதைத் தடுத்த அழகப்பன் (55) என்பவரையும் வெட்டினார். இதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற மேலூர் சரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிந்து, குற்றவாளி அண்ணாதுரையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்