திண்டுக்கல்: தமிழக அளவில் சிறந்த காவல் நிலையமாக இரண்டாம் இடம் பிடித்த திண்டுக்கல் மாவட்ட நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்களை, திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்களை வாழ்த்தினார்கள். உடன் திண்டுக்கல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களும், இதற்கு முன்பு நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளராக இருந்து தற்போது அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளராக உள்ள திரு.தெய்வம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இச்சிறப்புக்கு உதவிய சார்பு ஆய்வாளர் திரு.மகேஷ், சார்பு ஆய்வாளர் செல்வி.சாந்தி, சார்பு ஆய்வாளர் திரு.மனோகரன், சார்பு ஆய்வாளர் திரு.முப்பிடாரி மற்றும் காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா