திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர், கீழவங்காரம் கிராமத்தில், வசிப்பவர் திருப்பதி (50) மற்றும் அவரது அண்ணன் ஆறுமுகம் (55) ஆகியோர்களுக்கும் அதே ஊரை சேர்ந்த துரைராஜ் (62), மதுபாலன் (35), கனகராஜ் (50) என்பவர்களுக்கும் கீழவங்காரத்தில் வீராசாமி வீட்டின் பின்புறத்தில் உள்ள புறம்போக்கு நிலம் சம்மந்தமாக இடப்பிரச்சனை இருந்து வந்தது.
இது தொடர்பாக கடந்த 27.05.2015 அன்று காலை 11.30 மணியளவில் அவ்விடத்தில் திருப்பதி, அவரது மனைவி ஜெயலெட்சுமி, மகள் வான்மதி மற்றும் அவரது அண்ணன் ஆறுமுகம், ஆகியோர்கள் கொட்டகை அமைத்துக்கொண்டிருந்த போது துரைராஜ், மதுபாலன், மற்றும் கனகராஜ் ஆகியோர்கள் அவ்விடத்தற்கு வந்து திருப்பதி மற்றும் ஆறுமுகத்தை மண்வெட்டி, பூண் போட்ட மண்வெட்டி மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றால் தலையில் தாக்கியதில் அதே இடத்தில் இருவரும் இறந்தனர்.
திருப்பதியின் மனைவி ஜெயலெட்சுமி 27.05.2015 அன்று சிறுகனூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த வாக்குமூலத்தை பெற்று குற்ற எண்: 190/15 ர/ள 302 இ.த.ச -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் (குடிமை உரிமை பாதுகாப்பு) 27 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வழக்கின் குற்றவாளிகளான துரைராஜ், மதுபாலன், கனகராஜ் ஆகிய மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் 2,000/-ம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனையும் விதித்து நேற்று முன்தினம் 09.10.2019-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரிகள் மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி