மதுரை : சமீப காலமாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தை கண்டித்து தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை பைபாஸ் ரோட்டில் தனியார் மருத்துவமனை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி பழங்காநத்தம் ரவுண்டானா சாலை அருகில் பொதுக்கூட்டத்துடன் முடிவுற்றது. இந்த மாபெரும் கண்டன பொதுக் கூட்டத்திற்கு தமிழக மக்கள் மேடை இயக்கத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், தலைமை வகித்தார். ஜனநாயக மத சங்கத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய், சோகோ அறக்கட்டளையே சேர்ந்த செல்வ கோமதி, இந்திய தொழில் மையத்தை சேர்ந்த லெனின், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்புரையாக கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேராயர் அந்தோணி பாப்பு சாமி மதுரை மற்றும் ராமநாதபுரம் மண்டல CSI பேராயர் ஜெய் சிங் பிரின்ஸ் பிரபாகர் தமிழக மக்கள் மேடை மண்டலத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் அமலவை, அருண் கண்ணீர் சபை உடைய தலைவர் சகோதரி அந்தோணி புஷ்ப ரஞ்சிதம் முஸ்லிம் ஜமாத் தலைவர் தியாகத் அலி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலருமான அப்துல் சமது, ம.தி.மு.க, மதுரை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூமிநாதன், இந்திய தேசிய காங்கிரஸினுடைய கார்த்திகேயன், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி டி பேன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இயக்கத்தின் மதுரை மாவட்ட, புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரன் நன்றி கூறினார். முன்னதாக கொட்டும் மழையிலும் பேரணியாக திரளான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தைச் சார்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பேரணியின் போதும் கூட்டத்தின் போதும் கொட்டும் மழையிலும் அனைவரும் அமர்ந்திருந்து கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. ஆண்டனி வினோத்