திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி இரவு 10.30மணிக்கு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த சையதுஅலி நவாஸ் (வயது 25), கன்னியாகுமரியை சேர்ந்த அப்துல்சமீம் (25), காஜா மொய்தீன் (47), முகமது ஹனீப்கான், இம்ரான்கான், முகமது சையது உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியான அப்துல்யதின் அகமது (36) தலைமறைவாக உள்ளார். அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்