செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், ஜெகன் (30), பாலூர் கிராமம்
என்பவர் செங்கல்பட்டு மாவட்ட இணையவழி, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, தான் இணையதளம் மூலமாக குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள H.S. பிளான்ட் என்ற அலுமினியம் சில்வர் பாய்ல் கன்டெய்னர் என்ற நிறுவனத்திடம் ரூபாய் 2,00,000 லட்சம் முன்பணம் செலுத்தியதாகவும், பின்னர் தொடர்பு கொண்ட போது அந்நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் தான் செலுத்திய முன் பணத்தை பெற்று தருமாறு புகார் அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் IPS, அவர்களின் உத்தரவின்படி, இணையவழி குற்ற தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.R.சிவகுமார், உதவி ஆய்வாளர், திரு.B.தனசேகரன் தலைமையிலான தலைமைக் காவலர் திரு.R.குரு நாதன், திரு.D.சுதாகர் மற்றும் காவலர் திரு.M.தேவநாதன், திரு.மெகபூப், தனிப்படையினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்று விசாரணை மேற்கொண்டு வங்கி பரிவர்த்தனை மூலம் மோசடி செய்த ரூபாய் 2,00,000 லட்சம் மீட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V. பொன் ராமு அவர்கள் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
















