நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் நாகப்பட்டினம் உட்கோட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்தை இன்று (12.12.19) ஆய்வு மேற்கொண்டார்கள் பின்னர் கிடப்பில் இருக்கும் வழக்குகளை விரைந்து புலனாய்வு செய்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களின் புகார்களை உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்களை அவர்களின் நிலை குறித்து கனிவாக நடத்த வேண்டும் எனவும் வயது முதிர்ந்தவர்களின் புகார்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் மரம் நடுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்கள் பின்னர் காவல் நிலைய வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவேண்டும் என கூறி பின்பு அதன் தொடக்கமாக தென்னா மரக்கன்று ஒன்று நட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்