திருச்சி : குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச வீடியோக்கள் பகிர்தல் குறித்த வழக்கில் முதல் கைது என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள சமூக ஊடகப்பிரிவில் பணிபுரியும் இரண்டாம் நிலைக்காவலர் (312) திரு.முத்துப்பாண்டி என்பவர் 11.12.2019 அன்று காலை தனது பணியில் Facebook உள்ளிட்ட சமூக வலைதள ஊடகங்களை கண்காணித்து கொண்டிருந்தபொழுது “நிலவன் நிலவன்” என்ற பெயரில் முகநூல் கணக்கு துவங்கி அந்த முகநூலுக்கு ஒரு கைப்பேசி எண்ணை (95248-29649) பதிவு செய்தும்¸ அந்த முகநூல் பக்கத்தில் குழந்தைகள் தொடர்பான பல்வேறு ஆபாசப்படங்களை அந்த முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது தெரிய வந்தது. அந்த தகவலை வைத்து சைபர் குற்றப்பிரிவு மூலமாக அந்த நபரின் முகநூல் பக்கத்தை தீவிரமாக கண்காணித்தபொழுது அதில் மேலும் பல்வேறு குழந்தைகளின் ஆபாசப்படங்களையும் பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த கைபேசியின் முகவரியை ஆய்வு செய்தபோது அது கிறிஸ்டோபர் அல்போன்ஸ்¸ வயது 42¸ என்பவருடையது என தெரிய வந்தது. இதுசம்மந்தமாக¸ மேற்படி காவலர் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி மாநகரம் கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்ற எண். 25/19 u/s 13,14,15 of POCSO Act r/w 67 (A)(B)(b) of IT Act 2000 -பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கை கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புலன் விசாரணை செய்ததில், மேற்படி எதிரி குழந்தைகளின் ஆபாசப்படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தனது கைபேசியிலுள்ள தொடர்பு எண்களுக்கு பகிர்ந்ததாகவும்¸ மேலும் தான் இதற்கு முன்னர் “ஆதவன் ஆதவன்” என்ற முகநூல் பக்கத்தை துவங்கி அதிலும் குழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவிட்டதாகவும் அந்த “ஆதவன் ஆதவன்” முகநூல் பக்கம் வலைதள சேவை நிறுவனத்தார் அதை முடக்கி விட்டதாகவும்¸ அதன் பிறகு தான் “நிலவன் நிலவன்” முகநூல் பக்கத்தை துவங்கியதாகவும்¸ மேற்படி குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவிடுவதை தான் கடந்த நான்கு வருடங்களாக செய்து வருவதாகவும்¸ தான் அதற்கு அடிமையாகி விட்டதாகவும் கூறினார்.
மேற்படி குழந்தைகள் ஆபாசப்படங்களை சமூக வலைதளங்களில் வைத்திருப்பதும்¸ பதிவிடுவதும்¸ பகிர்வதும் IT Act 67(A)(B)(b) -ன் படி குற்றமாகும். இந்தசட்டத்தின்படி குற்றவாளிக்கு ஐந்து வருட சிறை தண்டனையும், ரூபாய் பத்து இலட்சம் அபராதமும் மற்றும் POCSO Act Section 13,14,15-ன்படி மேற்படி குற்றத்தை புரியும் குற்றவாளிக்கு ஏழு வருட சிறை தண்டனையும்¸ அபராதமும் விதிக்கப்படும்.
இணையதளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான ஆபாசப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து சமூக சீர்கேட்டிற்கு வழிவகை செய்யும் இதுபோன்ற நபர்கள்மீது போக்சோ சட்டத்தின்படியும் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்
கடந்த 2 ஆண்டாக குழந்தைகள் தொடர்பான செக்ஸ் வீடியோக்களை டவுன்லோடு செய்து அவற்றை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்த திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த கிரி என்ற கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42) என்ற நபரை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கிறிஸ்டோபர் பேஸ்புக்கில் நிலவன், ஆதவன் என போலி பெயர்களில் மெசேஞ்சர் மூலமாக செக்ஸ் வீடியோக்களுக்கான தனி குரூப் வைத்திருந்ததும் இதில் சுமார் 500 பேர் சேர்ந்து இருந்ததும் தெரிய வந்திருக்கிறது.
இந்த குரூப்புகளில் தினமும் குழந்தைகள் தொடர்பான செக்ஸ் வீடியோக்களை கிறிஸ்டோபர் அனுப்பியுள்ளான். தற்போது அவன் கைது செய்யப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் வைத்திருந்த குரூப்பில் உள்ள நபர்களை பட்டியலிடும் பணிகளை திருச்சி சைபர் க்ரைம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்தப்பணி இன்று முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் குரூப்பில் இருக்கும் 500 பேர் மீது எந்தவகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் திருச்சி மாநகர போலீஸார் தெரிவித்துள்ளனர்
குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல், திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி