கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (பெ/55) என்பவர் K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (பெ/26) என்பவருக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் தினேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடித்து, வருகிற 2022ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இந்நிலையில், ஒரு நபர் வெளிநாட்டு செல்போன் எண்ணிலிருந்து தனது செல்போன் எண்ணுக்கு தனது மகள் கவிதாவின் ஆபாச புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும், 250 K US Dollars (இந்திய மதிப்பு ரூ.1.8 கோடி) பணம் கொடுத்தால் புகைப்படங்களை அழித்து விடுவதாகவும், இல்லையெனில், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் சமூக வலைதளத்தில் கவிதாவின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து K-6 டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, K-6 டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி சம்பவத்தில் புகார்தாரரை பணம் கேட்டு மிரட்டிய ரமேஷ், (வ/51), போரூர், என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ரமேஷ், சந்திராவின் குடும்ப நண்பர் என்பதும், ரமேஷ் சந்திராவின் குடும்பத்தினரிடம் கடனாக கொடுத்த ரூ.50 லட்சம் பணத்தை கொடுக்காததால் மேற்படி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. மேற்படி நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.