திண்டுக்கல் : குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் சமூகவலைதளங்களில் கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து ஒருவர் குழந்தையின் ஆபாச படங்களை அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து அந்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த பார்த்தசாரதி (29) என்பது தெரியவந்தது, இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்கள் பார்த்தசாரதியை பிடித்து விசாரணை செய்ததில் அவர் செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பகிர்ந்தது தெரியவந்தது, இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கலில் இருந்து நமது நிருபர்
திரு.மீரா மைதீன்