திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களும் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கு தங்கள் வாகனம் மூலம் சென்று உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்கள். மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு அறிவுரைகளை கூறினார்கள். இந்நிகழ்வை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா