சென்னை: ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இம்மாதத்தில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில், உள்ள ஆதரவற்ற மக்களுக்கு மதிய உணவு, இரவு உணவு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர். திரு.முகமது மூசா. இது போன்ற பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவது பாராட்டுதலுக்குரியது.