கோவை: கோவை மாநகர சாயிபாபா காலணி NSR சாலையில் ஆதரவற்றநிலையில் 60 வயது மதிககத்தக்க தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் பொன்ராஜ் – என்பவரை சாயிபாபா காலனி உதவி ஆய்வாளர் திரு.V.தனசேகரன் அவர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வேண்டி R.S. புரம் மாநகராட்சி இரவு தங்கும் மையத்தில் ஒப்படைப்பு செய்யப்பட்டார்.
மையத்தில் முதியவருக்கு வக்கீல் Lion. மா.மதிவாணன் M.A.B.L அவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதன் மூலம் முதியவர் பொன்ராஜ் சென்னை பல்கலைக் கழகத்தில் B. ARCHITECT. Qualified Graduate- எனவும் தனது மனைவி நிகிலா எனவும், 2 மகன்களில் ஒருவர் B.E பட்டதாரி, மற்றொருவர் B.E.MBA எனவும் தனது சொந்த ஊர் கரிடல்குலம், தூத்துக்குடி எனவும் தற்போது தனக்கு கோவையில் தனது பெயரில் 1 cr மதிப்புள்ள வீடு உள்ளது எனவும், தற்போது நடக்க இயலாத நிலையில் தனது நிலை உள்ளது எனவும் கூறினார். மேலும் தனது 2 வது மகன் சூர்யா B.E. முடித்து MBA படித்து வரும் மகனின் தொலைபேசி எண்- ஐ கொடுத்தார். தொலைபேசி அழைப்பை ஏற்ற மகன் நேரில் வந்து தனது தகப்பனார் – ஐ பார்த்தார்.
வரும் 24.11.19 அன்று தனது தகப்பனார் – ஐ சாயிபாபா காலனி- யில் உள்ள 1 கோடி மதிப்புள்ள சொந்த வீட்டிற்க்கு அழைத்துச் செல்வதாக கூறி சென்றார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
பார்த்தசாரதி