அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களால் போலீஸ் கிளப்(POLICE CLUB) என்ற குழுமம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.
இக்குழுமத்தின் முக்கிய நோக்கம்: குழந்தை திருமணத்தை முழுமையாக தடுத்தல், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆபத்தான சூழ்நிலைகளில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து அவர்களை தற்காத்துக்கொள்ள அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்தல் ஆகும்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சுமதி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி. அமரஜோதி அவர்கள் முன்னிலையில் கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் குழுமம்(Police Club) சார்பாக 3 வது வார வகுப்பாக 19/02/2020 அன்று சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். ஜீரோ ஹவர்ஸ் (Zero hours)எனப்படும் ஒரு மணி நேரம் மின்சாதன பொருட்கள் இல்லாமல் பெற்றோருடன் நேரம் செலவழிப்பது குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது. KAVALAN SOS APP மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி