அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் டாக்டர் . திருமதி.ஹேமா சந்திரன் மற்றும் அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர்.திரு. மணிகண்டன் அவர்கள் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் குரோனா வைரஸ் குறித்து 17/03/2020 அன்று விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கரோனா வைரஸ் என்பது பற்றியும் அதன் நோயின் அறிகுறிகள், வைரஸ் நோய் பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான சிகிச்சைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் மேலும் கைகளை சுத்தமாக கழுவும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.