அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறையில் அரியலூர், கீழப்பழுவூர்,திருமானூர்,செந்துறை, ஜெயங்கொண்டம் ,ஆண்டிமடம் ,மீன்சுருட்டி தா.பழூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலான நேரங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு உதவியாக சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். வயது வரம்பு 25 முதல் 45 வரை இருக்க வேண்டும். கல்வித்தகுதி ஏதேனும் +2/பட்டப்படிப்பு முடித்தவராகவும், நல்ல உடல் தகுதி உடைய வராகவும், அரசியல் கட்சியில் சாராதவராகவும்,எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மாவட்ட காவல் அலுவலகம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிராபிக் வார்டன் பதவிக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட காவல் அலுவலகத்தில் 31/01/2020 தேதிக்குள் நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அரியலூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அஜித்















