ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் நகரத்தில், நேற்று கும்பினிப்பேட்டை நேதாஜி இளைஞர்கள் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
இதில் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் தலை கவசம் அணிந்து கொண்டு, இரு சக்கர வாகனங்களில் அரக்கோணம் நகர் முழுவதும் வலம் வந்தனர்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகணன் அறிவுறுத்தலின் பேரில், அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மானோகரன் தலைமையில், அரக்கோணம் நகர ஆய்வாளர் திரு. முத்துராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு வாகன பேரணியை சீரும் சிறப்புமாக வழி நடத்தினார்.
இறுதியாக புதிய பேருந்து நிலையம் அருகில் மக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும், வாகனங்களின் விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டியும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் காவல்துறையினரும், இளைஞர்களும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா ஒளிபரப்பு ஊடக பிரிவு மாநில தலைவர் திரு.பாபு மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்















