சென்னை : சென்னை பெருநகர காவல், T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் எம்.அன்பழகன், த.கா.36120 என்பவர் தனது மகன் தர்ஷித் அபினவ் என்பவரின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (25.04.2020) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கொரோனா நிவாரண நிதிக்காக, ரூ.10,000/- வழங்கினார். உடன் தலைமைக் காவலரின் மனைவி திருமதி.ரம்யா மற்றும் 1 வயது மகன் தர்ஷித் அபினவ் உள்ளனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை