கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மேற்பார்வையில் ஆய்வாளர் திருமதி.எழிலரசி தலைமையில், உளுந்தூர்பேட்டையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.அகிலன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் அகிலன் எதிரி அருள்மணி வயது 56 த/பெ. மாயவன் உளுந்தூர்பேட்டை என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூபாய் 50,000 மதிப்புள்ள மது பாட்டில்களை கைப்பற்றி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் அகிலன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பொறுப்பேற்றவுடன் அதிரடியாக செயல்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.