சென்னை : சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, R.K. சாலை, அண்ணா ரோட்டரி, GST சாலை, சர்தார் பட்டேல் ரோடு ஆகிய சாலைகளில், வாகன பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதி வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை தடுக்கவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து சிறப்பு வாகன தணிக்கை நேற்று (24.12.2019) இரவு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி 24.12.2019 இரவு தொடர்ந்த அதிரடி நடவடிக்கையில் அதி வேகமாகவும், ஆபத்தாகவும் வாகனங்களை ஓட்டியதற்காக 158 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 126 நபர்கள் மீது u/s 336 மற்றும் 114 IPCன் படி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 32 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் (MV Act) படி (Over Speed, Rash and Negligent Driving, Racing) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற புத்தாண்டு விபத்தில்லா நாட்களாக இருக்க வேண்டி இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை மேலும் தொடர உள்ளது.
இனிவரும் காலங்களில், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக, பைக் ரேஸ்சில் ஈடுபடும் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை