திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி தனிப்பிரிவு SI திரு.மாரிமுத்து மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லாவண்யா அவர்களின் தலைமையில் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது J. மேட்டூரில் உள்ள மனமகிழ் மன்றத்தில் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டும், மேலும் சோதனையின்போது பணியை செய்யவிடாமல் தடுத்த வக்கம் பட்டியைச் சேர்ந்த ராஜபாட் செட் உட்பட 20 நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு பிரிவு 8,9of TNG Act, 353,506(i)IPCன் படி வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து பணம் ரூபாய்1,08, 510/-ம் நான்கு சக்கர வாகனங்கள் ஆறு, மற்றும் 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 21 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா