திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடிகொம்பு காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் பவுல் ராஜ் அவர்கள் இன்று 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று தேவையின்றி வெளியே வருகின்ற பொதுமக்களிடம் சரியான காரணம் மற்றும் அவர்களின் தேவைக்கான காரணத்தை கேட்டறிந்தார்.
பின்னர் அரசு வெளியிட்டுள்ள அவசர காலம் மற்றும் முக்கிய நிகழ்வின் போது பயன்பாட்டில் உள்ள அனுமதி நகலை பெற விதிமுறைகளையும் முறையாய் அரசு வெளியிட்டுள்ள மின்னனு செயலி மற்றும் அதன் விளக்கத்தை கூறி அவசர காலத்தில் தேவைகாக வெளியே செல்ல அனுமதி நகலை பெறும் முறையை பொதுமக்களிடம் சென்று சந்தேகங்களையும் ஒலி பெருக்கி மூலம் தெளிவுபடுத்தினார் .
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா