கோவை:கோவை மாநகர காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த, வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 50 கிலோ அரசி, 50 கிலோ வெங்காயம், 50 கிலோ உருளை கிழங்கு மற்றும் காய் கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் கோவை காட்டூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. லதா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முக சுந்தரம், திரு.ரங்கராஜ், திரு.கணேஷ் மற்றும் காவல்துறையினர் மூலம் வழங்கப்பட்டது. 144 தடை உத்தரவால், வாழ்வாதாரம் இழந்து, தவிக்கும் வடமாநிலத்தவரின் நலனில் அக்கறை கொண்ட நம் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்















