விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டபோது, ஆவியூர் to அருப்புக்கோட்டை ரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை மீட்ட அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் உதவி ஆய்வாளர் திரு.வேல்முருகன், தலைமைகாவலர்கள் திரு.செல்வகுமார், திரு.கருப்பசாமி, முதல் நிலை காவலர்கள் திரு.கோபிநாத், திரு.வெள்ளைச்சாமி மற்றும் காவலர் திரு.தனப்பாண்டி ஆகியோர் மூலமாக ராஜேந்திரன் பற்றி விசாரணை மேற்கொண்டு, அவரது சொந்த ஊரான வாடிபட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதிக்கு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் அறிவுரையின்படி, அழைத்து சென்று ராஜேந்திரனை அவரது அக்காள் கணவர் ரவி என்பவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் அந்நபரை கவனமாக பார்த்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர்.
 
                                











 
			 
		    


