கிருஷ்ணகிரி : ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் திரு .இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் திரு .முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை குருபரப்பள்ளி – தீர்த்தம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் தர்மபுரி மாவட்டம் முருக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (31) பூவரசன் (27) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பாலக்கோடு பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்கு ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அலுவலர்கள் கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் 10 டன் ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.















