மதுரை: ஜூலை 21 ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மச்சக்காளை மகன் சக்தி (22). இவர் எம்.கே.புரத்தில் டீக்கடை அருகே வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்தார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் அவரை பிடித்தார். அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார். அவர் எதற்காக எந்த திட்டத்தில் அந்த பகுதியில் வாளுடன் திரிந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















