திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சரகம், தும்பிச்சம்பட்டி புதூரில் தோட்டத்து குடோனில், கூல்ட்ரிங்ஸ் வியாபாரம் செய்து வருபவர் குப்புசாமி (44), இவரது குடோனில் மதுபான பாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகியோர் சிறப்பு ரோந்து நடத்தியதில் மேற்படி இடத்தில் 1392 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் 196.32 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் (மதிப்பு ரூ.1,31,474) வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய 1.குப்புசாமி, 2.மோசஸ் பெனிடா, 3. சையது முகமது (எ) முஸ்தபா ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா