வேலூர் : வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெங்களூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலை, வசூர் ஊத்துக்கோட்டை அம்மன் கோயில் எதிரே நேற்று 08/01/2023 மாலை சுமார் 4.45 மணியளவில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் 7 வயது ஆண் குழந்தை மற்றும் அக்குழந்தையின் தந்தையும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு நபர்களும் பலத்த காயமடைந்தனர்.

R.N பாளையம் , வேலூர் என்ற குழந்தையை மீட்டு காலதாமதமின்றி முதலுதவி வழங்கியுள்ளார்.

தன்னுடைய சொந்த குழந்தை போல் அதே பதற்றத்துடன் காப்பாற்ற தனது கரங்களிலேயே சுமந்து சென்று ராணிப்பேட்டையில் உள்ள CMC மருத்துவமனையில் பொன்னான நேரத்தில் (Golden Hour) சிகிச்சையில் சேர்த்த திருமதி.கீதா அவர்களின் தாய்மை உணர்வு மற்றும் நற்செயலை பாராட்டி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S ராஜேஸ் கண்ணண் இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக நற்கருணை வீராங்கனையே (GOOD SAMARITAN’) என்று பாராட்டி நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது.