தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், கொரோனா பெருந்தொற்று நோயால் உயிரிழந்த காவலர் தெய்வத்திரு. முத்துகுமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அரசு வழங்கும் காப்பீட்டு தொகை 25 லட்சத்திற்கான வங்கி காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன். அவர்கள் தெய்வத்திரு. முத்துகுமார் அவர்களது மனைவி திருமதி. ராஜலெட்சுமியிடம் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
















