இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (03/02/2023) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திருமதி.மங்கையர்கரசி திமிரி காவல் நிலையம், திரு. சாலமன் ராஜா அரக்கோணம் நகர காவல் நிலையம், உதவி ஆய்வாளர்கள் திரு.மகாராஜன் ஆற்காடு நகர காவல் நிலையம், திரு.சிரஞ்சீவிலு நெமிலி காவல் நிலையம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.இளவரசன் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு.பலராமன் திமிரி காவல் நிலையம், திருமதி.செல்வி மற்றும் திரு.சதாசிவம் நெமிலி காவல் நிலையம், தலைமை காவலர் திருமதி. வசந்தி சிப்காட் காவல் நிலையம், முதல்நிலை காவலர் திரு.குமரன் இராணிப்பேட்டை காவல் நிலையம், திருமதி. மாரியம்மா திமிரி காவல் நிலையம், காவலர்கள் திரு. வெங்கடேசன் வாழைப்பந்தல் காவல் நிலையம், திரு.சுகுமாரன் அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், திரு.கதிர்வேல் அரக்கோணம் நகர காவல் நிலையம் ஆகியோர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்கள். மேலும் இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் திரு.முத்துகருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு), உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக் (அரக்கோணம் உட்கோட்டம்), துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கோட்டீஸ்வரன் ( பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு) , காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















