கோவை : கோவை (12/09/2022 ) மதியம் 02.00 மணி அளவில் வெரைட்டி ஹால் ரோடு ,NH சாலை சந்திப்பு அருகில், யாரோ ஒருவர் ரூபாய் 50,000 – த்தை தவற விட்டுச் சென்றுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த
அன்பழகன் (42), கணுவாய் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (20), மற்றும் கணுவாய் காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி(22), ஆகிய மூவரும் கீழே கிடந்த பணத்தை எடுத்து பணத்தை தொலைத்தவர்கள் யாராவது தேடி வருகிறார்கள் என்று சுமார் ஒரு மணி நேரம் பணம் கிடந்த இடத்திலேயே காத்திருந்துள்ளனர். அங்கு யாரும் வராததால், கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன்I.P.S, அவர்களை நேரில் சந்தித்து மேற்கண்ட மூன்று நபர்களும் 50000/- பணத்தை ஒப்படைத்தனர். காவல் ஆணையர் அவர்கள் அந்த மூவரையும் வெகுவாக பாராட்டி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அவர்களை அழைத்து மேற்கண்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்