தமிழ்நாடு : தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales man) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
பணியிடங்கள் : 4000
சம்பளம் : 8600 – 29,000 வரை (பதவிக்கு ஏற்றார் போல)
தகுதிகள் : வயது : (01/07/2022) அன்றுவரை (18), வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு வகுப்பிற்கு தகுந்தாற் போல மாறும்.
கூட்டுறவு துறையின் அந்தந்த மாவட்ட இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி : விற்பனையாளர் : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி. கட்டுநர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மொழி திறன் : விண்ணப்பதாரர் தமிழ் எழுத படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
நிபந்தனை : நியமனத்தின் போது அரசு பணியாளர்கள் தேர்வுக்குப் பின்பற்றப்படும் வகுப்பு சுழற்சி முறை ஒட்டு மொத்த நியமனத்திற்கும் பின்பற்றப்படும்.