கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கடாடாம்புலியூரில் உள்ள விஸித்திர இம்பெக்ஸ் முந்திரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இங்கே பணி புரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, அதில் ஒருவர் சக ஊழியர் இருவரை இரும்பு கம்பியால் தாங்கியாதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபடுகிறது. கொலையாளியை உடனடியாக காடாம்புலியூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் அருகிலே நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்