சென்னை : சென்னை நீலாங்கரையில் சேர்ந்த பெண் ஒருவர் அதிகாலை 2 மணியளவில் காவல்துறை அவசர எண் 100க்கு அழைத்து தனது வீட்டின் முதல் தளத்தில் திருட்டு நடப்பதாக பதைபதைப்புடன் கூறியுள்ளார்.
இன்று2:00AMஅளவில்100 க்கு நீலாங்கரையில் இருந்து ஒரு பெண்2 திருடர்கள் தனது வீட்டின் முதல் தளத்தில் திருடுவதாக தெரிவித்தார்.இந்த தகவல் கிடைத்த 3 நிமிடத்தில் ரோந்து வாகனங்கள் அங்கு சென்று திருடியவர்களை பிடித்துஅசம்பாவிதம் ஏற்படாதவாறு காத்தனர்.
பெண் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து போலீசார் தகவல் கிடைத்த மூன்றே நிமிடத்தில் திருடர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இந்நிலையில் இந்த செய்தியை அடையாறு காவல் துறை துணை ஆணையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இது சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வாலின் கவனத்திற்கு செல்ல அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குற்றவாளிகள் தப்பித்த பின் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு செல்லும் காட்சிகள் எல்லாம் திரைப்படத்தில் மட்டுமே இருக்கும். இந்த ரோந்து குழு உறுப்பினர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்’ என்று மனம் நெகிழ பாராட்டியுள்ளார்.