திருப்பூர் : திருப்பூர் அடுத்த கூலிபாளையம் அருகே திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் திரு .ராஜன் அவர்கள் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்த ராமலிங்கம் என்பதும் தற்போது திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் அருகே வசித்து வருவதும் தெரியவந்தது அவரிடமிருந்து சுத்தி, திருப்புலி மற்றும் 16 பவுன் நகையும் போலீசார் பறிமுதல் செய்தனர் இவர் மீது அனுப்பர்பாளையத்தில் 5 வழக்குகளும் 15 வேலம்பாளையம் 1 வழக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வழக்குகளும் சேலம் மாவட்டத்தில் இரண்டு வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது மேலும் இவர் இந்த வழக்குகளில் ஆஜராகாமல் மூன்று வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.