சென்னை: போரூர் ஏரிக்கரை பாலம் அருகே, தாம்பரம் வழி புழல் செல்லும் வழியில், நேற்று (07.08. 2020) மதியம் சுமார் 1.30pஅ மணி அளவில் விபத்து நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு சென்ற பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தாம்பரத்தில் இருந்து போரூரை நோக்கி வந்த ஆட்டோவை, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, ஆட்டோவில் இருந்த 110 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மீண்டும் அதே சாலையில் அதே வழியாக வந்த மற்றொரு ஆட்டோவில் ஆய்வு செய்தபோது, 50 மது பாட்டில்கள் இருந்தன. 2 ஆட்டோக்கள், அதில் இருந்த ஆறு நபர்கள் மற்றும் 160 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றபட்ட ஆட்டோக்கள் மற்றும் மதுபாட்டில்கள், பூந்தமல்லி போக்குவரத்து ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் மற்றும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் திருமதி. கௌசல்யா அவர் தலைமையிலான காவலர்கள், திரு. சீனிவாசன் முதல் நிலை காவலர் Gr1 31063, திரு. ராஜேஷ் குமார் (தலைமை காவலர் 32889) பூந்தமல்லி அவசர அழைப்பு வண்டி ஓட்டுநர், காவலர் திரு. முத்து Gr1 28592, ஆகியோர் மாங்காடு குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிட்டிபாபு அவர்களிடம் ஒப்படைத்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ் வண்ணாரப்பேட்டை