சென்னை : சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திரு.M.ஜெயச்சந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.M.முகுந்தன், திரு.M.முகமது இதயதுல்லா, தலைமைக்காவலர்கள் R.சுப்பிரமணியன் (த.கா 20472), S.செல்வகுமார் (த.கா 26239), P.சுதாகர் (த.கா.எண்.36242) மற்றும் முதல் நிலைக்காவலர் C.பவுன்ராஜ் (மு.நி.கா31282) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 10.10.2020 அன்று மணலி, SRF நிறுவனம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 1.ரவி, வ/38, சோழவரம், 2.டேனியல், வ/20, , மணலி ஆகிய 2 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 37 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றுதல் செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினரை இன்று (13.10.2020) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.