சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப. நேற்று முற்பகல் தாம்பரம் முடிச்சூர் ஏரி அருகில் உள்ள நீரால் சூழப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று காவல் துறையினரும் மீட்பு படையினரும் செய்து வருகின்ற பணிகளை பார்வையிட்டார். காவல்துறையினர் மீட்பு படையினர் உடனிருந்து பொதுமக்களுக்கு உதவிட அறிவுரை வழங்கினார்.
பின்னர் சேலையூர் லஷ்மி நகர் அஷ்டலட்சுமி நகர் .ஐ ஏ எப் பகுதிகளில் நீரால் சூழப்பட்ட குடியிருப்பு பகுதி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கார்லே மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு முகாமிற்கு சென்று தங்கியுள்ள பொதுமக்களுக்கும உணவு பொட்டலங்கள் பன் ரொட்டி மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கி பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆணையாளர் வருகையின்போது இணை ஆணையாளர் (தெற்கு.) திரு ஏ.ஜி.பாபு இ.கா.ப . மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் நிவர் புயல் தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் உதவியை நாட, காவல் ஆணையரகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாட்டறை துவங்கப்பட்டு, கட்டுப்பாட்டறை எண்.94981-81239க்கு தொடர்பு கொண்டு காவல்துறையின் உதவியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் பெரும் மழை காரணமாக பல சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் காவல் ஆளிநர்கள், மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து சரி செய்து, சீரான போக்குவரத்துக்கு வழி வகுத்து வருகின்றனர். எங்கேனும் சாலைகளில் தேங்கிய மழைநீரில் பெரிய பள்ளம் இருந்தாலோ அல்லது இடர்பாடுகள் தெரிந்தாலோ அங்கு பேரிகார்டு தடுப்புகள் கொண்டு எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் பெருமழை காரணமாக வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், அசோக்நகர், பெரவள்ளூர், எழும்பூர், அபிராமபுரம், யானைகவுனி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, வளசரவாக்கம், கொரட்டூர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, மயிலாப்பூர், வேப்பேரி, அரும்பாக்கம் மணலி, கோடம்பாக்கம், ராயப்பேட்டை, புழல், மாதவரம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, அண்ணாசதுக்கம், அமைந்தகரை, நந்தம்பாக்கம் உட்பட 80 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் விழுந்த 102 பெரிய மரங்கள் சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து அப்புறப்படுத்தினர்.
இந்த ஆண்டு காவல்துறையினருக்கு மிகுந்த சவாலான ஆண்டு என்றே சொல்லலாம் ஏனெனில்
ஆண்டின் துவக்கத்தில் கொரானா பாதுகாப்பு துவங்கி ஆண்டின் இறுதியில் நிவர் புயல் வரை மக்களைப் பாதுகாக்கும் உன்னத பணியில் நம் தமிழக காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
ஆதலால் மிகுந்த பணிச்சுமையால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நம் காவல்துறையினரை யாரும் உற்சாகப்படுத்துவது இல்லை. எங்கோ ஒரு சில காவலர்கள் காவலர்கள் செய்யும் தவறுகளை வெட்டவெளிச்சமாக சமூக ஊடகங்களில் போட்டு வறுத்து எடுக்கின்றனர். அதே நேரத்தில் நற்செயல்கள் செய்யும் காவலர்களை ஊடகங்கள் வாயிலாக யாரும் உற்சாக படுத்துவதில்லை. கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், நம் தாய் தந்தை பணியாற்றினால், அதனை நாம் ஏற்றுக்கொள்வோமா ?
பொதுமக்களாகிய நாம், நம் காவலர்களை இன்முகத்துடன் உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களை பாராட்டி விழா எடுக்க வேண்டும். அப்போது அவர்களுடைய மன அழுத்தம் பறந்து போகும். அவர்கள் பணியை மேலும் சிறப்பாக செய்வார்கள். நம் காவல்துறையினரை உற்சாகப்படுத்தி பாராட்டவே, 12 மாதமும், 24 மணி நேரமும் இடைவிடாத பணியினை பொதுமக்கள் நினைவு கூறும் வகையில், போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக டிசம்பர் 24 காவலர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த காவலர் தினத்தை, ஒவ்வொரு பொதுமக்களும் நம் கண்ணில் படும் ஒவ்வொரு காவலர்களுக்கும் டிசம்பர் 24 அன்று இனிப்புகள் வழங்கி பாராட்டுவோம். கொரானாவில் இருந்தும், புயலில் இருந்து நம்மை காத்த நம் காவலர்களுக்காக வரும் டிசம்பர் 24 ஐ காவலர் தினமாக அனுசரித்து அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா