இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பாதுகாப்பிற்காகவும், விதி மீறலில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ள பறக்கும் கேமராக்களை காவல்துறை துணைத் தலைவர் திருமதி.காமினி.IPS., இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூதாய தலைவர்கள் பொது மக்கள் உள்ளிடோர் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு நேரில் வந்து நாளை அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதையொட்டி, பசும்பொன், கமுதி, அபிராமம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், ஆளில்லா விமானம் மூலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் காவல்துறை தலைவர் திரு.ராஜேஷ்தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், 2 ஐஜி, 4 டிஐஜி, 15 எஸ்பிகள், 30 ஏடிஎஸ்பி, 80 டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
100க்கும் மேற்பட்ட போலீசார் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். 39 வாகன சோதனை சாவடி அமைத்தும். ட்ரோன் மூலவும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி கார்த்திக் தெரிவித்தார். 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்பி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்