இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுவயல் பகுதியில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய சேகர் என்பவரை ஆய்வாளர் திருமதி.எழிலரசி அவர்கள் Mines and Minerals Regulation Development Act-ன் கீழ் கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து ஒரு டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.
குடிபோதையில் நண்பனை கொலை செய்த இருவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகே உள்ள பர்மா காலனி பகுதியில் மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஷேக் என்ற ஜெயக்குமார் என்பவரை வாளால் தாக்கி கொலை செய்த ஆனந்த் என்ற முனியசாமி மற்றும் பரத் முருகன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.திருமலை அவர்கள் u/s 302 IPC-ன் கீழ் கைது செய்தார்
22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் கண்மணி மற்றும் அவரது தந்தை ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.சபரிநாதன் அவர்கள் NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்