திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (29.05.2020) சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவல் படி காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 20 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 38,830/-பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கலில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கிருஷ்ணன்