கடலூர் : கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு சக்கரவாகனங்கள் திருடு போனதை தொடர்ந்து போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டுசக்கர வாகனம் நிறுத்திய ஐந்து நிமிடத்தில் காணமல் போனதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் வாகன உரிமையாளர் புகார் தெரிவித்தார்.
இதனடிப்படையில் பண்ருட்டி DSP பாபு பிரசாந்த், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வீரமணி,உதவி ஆய்வாளர் தவச்செல்வம் ஆகியோர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.அதில் பண்ருட்டி பகுதியைச்சேர்ந்த நான்குபேரும், புதுப்பேட்டை, சேடப்பாளையம்,ராசாபேட்டையைச்சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மொத்தம் 31 இரண்டு சக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது.மேற்படி குற்றவாளிகளுடன் இரண்டு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு நெல்லிக்குப்பம் காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபித்த காவல் அதிகாரிகளையும், காவலர்களை நெல்லிக்குப்பம் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் அவர்கள் பாராட்டினார்.