திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவத்தூர் அருகே உள்ள தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவரது கணவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் பூங்கொடி தனது கைக்குழந்தையுடன் அன்றாட தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
இதனையறிந்த திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வினோத் அவர்கள் பூங்கொடியை தனது அலுவலகத்திற்கு அழைத்து தன்னார்வலர்கள் உதவியுடன் தையல் மெஷின் ஒன்றை வழங்கி கடின உழைப்பே வாழ்க்கையின் முன்னேற்றம் என அறிவுரை கூறினார்.
தன்னுடைய குடும்ப சூழ்நிலையை அறிந்து தனக்கு உதவி செய்த ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பூங்கொடி நன்றி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
