திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாம்பட்டியில் மதுபோதையில் முன் விரோதம் காரணமாக சங்கர்(35) என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(35) பாண்டியராஜன்(27) மற்றும் சசிகுமார்(27) ஆகிய மூன்று நபர்களையும் கொலை செய்யப்பட்டவரின் தகப்பனார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பிரிவு 302 IPCன் படி வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா