கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருளரசு,IPS அவர்கள் உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, காவல் ஆய்வாளர் திரு.கந்தசாமி, தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை சம்மந்தமாக மேட்டுபாளைய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8.00 மணிக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது. அதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நம் காவல்துறையினர் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் பட்சத்தில், வழக்கமான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மட்டும் போதாது. குறைந்தது 1 மீட்டர் சமூக இடைவெளியைப் பராமரிப்பது மட்டுமே சிறந்த பயனைத் தரும். கொரோனா வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க அடிக்கடி கைகளைக் கழுவுவது மற்றும் தூய்மையாக இருத்தல் அவசியம் என உலக சுகாதார மையம் கூறுகிறது. அதனையே நம் காவல்துறையினர் சமூக அக்கறையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர்கள் நேற்று பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த மறுநாளே சமூக அக்கறையுடன் கொரானா விழிப்புணர்வு அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தனார். பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் துண்டு கொரானா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் தீயணைப்பு காவல்துறையினருடன் விநியோகம் செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்