திண்டுக்கல் : திண்டுக்கல் வேடபட்டி பகுதியில் கடந்த மாதம் பிரபல ரவுடி ரமேஷ் என்ற சுள்ளான் ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜான்சன் வினோ, டைசன் வினோ, மற்றும் ஆரோக்கிய தனிஸ்லாஸ் என்ற வினோத் ஆகிய மூவரையும் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் படி , கைது செய்யப்பட்ட மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா