கடலூர் : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நடராஜன் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு. ஜூலியன் குமார் ஆகியோர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இறந்தனர் இவர்களுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தானாக முன்வந்து தனது ஒரு நாள் சம்பளத்தை அவர்களது குடும்பத்திற்கு நிதி உதவியாக வழங்கினார்கள். இதில் 34 லட்சத்து 59 ஆயிரத்து 547 நிதி திரட்டப்பட்டது. இதனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ம. ஸ்ரீ அபிநவ். இ.கா.ப., அவர்கள் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1729773 தலைமை காவலர் திரு. ஜூலியன் குமார் குடும்பத்திற்கு 1729774 ரூபாய்க்கான காசோலையை நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார் இந்நிகழ்வில் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. R. பாண்டியன், துணை காவல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி. சாந்தி, திரு. பாபு பிரசாந்த், திரு. சரவணன், தனிப்பிரிவு ஆய்வாளர் திரு. செல்வி ஈஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்