சென்னை : காவல் துணை ஆணையாளர் தியாகராய நகர் காவல் மாவட்டம், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 26.5.2020 அன்று பணிக்கு திரும்பிய தியாகராய நகர் காவல் துணை ஆணையாளர் அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 26.5.2020 அன்று காலை தியாகராயா நகர் காவல் துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நேரில் சந்தித்து, நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், R-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் ஓய்வு அறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹாஇ.கா.ப., , தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்கள் திரு.பி.பகலவன், இ.கா.ப., (அடையாறு), திரு.கே.பிரபாகர் (புனித தோமையர் மலை), திரு.ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), திரு.எம்.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை