இராமநாதபுரம் : கமுதி அருகே கீழராமநதியைச் சோ்ந்த ஸ்ரீரங்கம் மகன் மூக்கையா (37). இவா் வியாழக்கிழமை இரவு கமுதியிலிருந்து கீழராமநதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, கிளாமரத்தைச் சோ்ந்த காசிராஜன் மகன் பாலமுருகன் (31) ஓட்டி வந்த ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் மூக்கையா மற்றும் ஆட்டேவில் பயணம் செய்த கிளாமரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் மாரிச்சாமி (46), சின்னபாலு மகன் சந்திரசேகா் (31) ஆகியோா் பலத்த காயமடைந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இதில் மூக்கையா, செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். மாரிச்சாமி, சந்திரசேகா் இருவரும் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்சாமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சந்திரசேகா் தொடா்ந்து சிகிச்சைபெற்று வருகிறாா்.மற்றொரு விபத்தில் இளம் பெண் பலி: கமுதி அருகே உள்ளகணக்கியைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகள் ரூபா (18) கிளாமரத்துப் பட்டிக்கு இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அதே போல் அகரத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் என்பவா…. ராமசாமிபட்டிக்கு வந்து கொண்டிருந்தாா். இவா்கள் வந்த இருசக்கர வாகனங்கள் ராமசாமிபட்டி விலக்கு அருகே நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இவ்விரு விபத்துகள் குறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்